தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், எங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் / அல்லது வணிகங்களை செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நம்மில் பெரும்பாலோர் எண்ணியல்(Digital) சாதனங்கள் மற்றும் இணையத்தை நம்பியுள்ளோம். தரவை செயலாக்குவதற்கும், சேமிப்பதற்கும், மாற்றுவதற்கும் இந்த சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நாங்கள் சார்ந்து இருக்கின்றோம். இதன் விளைவாக ஒரு பெரிய அளவிலான தகவல்கள் மின்னணு வழிமுறைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன, அவை குவிக்கப்பட்டு பின் விநியோகிக்கப்படுகின்றன. இது எண்ணியல்(Digital) சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்தி பல்வேறு வகையான குற்றவியல் அல்லது மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றது. எனவே, இந்த தரவு / தகவல்களைப் பாதுகாப்பது ஒரு சவாலான பணியாக மாறும். இத்தகைய குற்றவியல் அல்லது மோசடி நடவடிக்கைகளில் எண்ணியல் தடயவியல் மூலம் சம்பவத்தை வெளிப்படுத்தி திரை நீக்க ஒரு உதவியாக செயல்படுகிறது.

இலங்கை CERT | CC எண்ணியல்(digital) தடயவியல் குழு 2010 ஆம் ஆண்டிலிருந்து சேவையை வழங்கி வருகின்றது மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த எண்ணியல்(digital) தடயவியல் ஆய்வாளர்களைக் கொண்டுள்ளது. உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருவிகளின் மூலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட எண்ணியல் தடயவியல் நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகின்றோம்.

இலங்கை CERT|CC தற்போது இரண்டு வகையான வாடிக்கையாளர்களுக்கு எண்ணியல் தடயவியல் விசாரணை சேவைகளை வழங்குகிறது;
அ. இலங்கை காவல்துறை, இலங்கை நீதிமன்றத்தின் வேண்டுகோளின்படி
  • இலங்கை CERT | CC எண்ணியல் தடயவியல் சேவைகளை 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கட்டண சாதன மோசடிச் சட்டத்தின் அதிகாரத்துடன் வழங்குகின்றது.(இணைப்பு)
  • 2006 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க கொடுப்பனவு சாதனங்கள் மோசடிச் சட்டத்தின்படி, இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் தொடர்பான அனைத்து விசாரணையிலும் காவல்துறைக்கு உதவ நிபுணர் குழுவை அமைச்சர் வர்த்தமானி நியமனத்தின் மூலம் நியமிக்க முடியும்.
  • 2010 ஆம் ஆண்டில், அசாதாரண வர்த்தமானி எண் 1677/26 இன் கீழ் (இணைப்பு), இலங்கை CERT | CCஇனை மேற்கண்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக இலங்கை ஜனாதிபதி அவர்கள் நியமித்துள்ளார்.
  • இலங்கை CERT | CC கடந்த பத்து ஆண்டுகளில் காவல்துறைக்கு துணை புரிவதற்காக நூற்றுக்கணக்கான எண்ணியல் தடயவியல் விசாரணைகளை வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றது.
ஆ. தனியார் / பொதுத்துறை நிறுவனங்கள்
  • இலங்கை CERT | CC எண்ணியல் தடயவியல் விசாரணைகளின் பரந்த பகுதியை உள்ளடக்கிய விரிவான நிபுணத்துவத்தை வழங்குகின்றது. இந்த அணியானது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான எண்ணியல் தடயவியல் விசாரணைகளை கையாளுவதில் வெற்றிகரமாக செயற்படுகின்றது.

மேலும், இலங்கை CERT | CC உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கான எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகளை நடாத்துகிறது. இலங்கை CERT | CC வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட(tailor-made) எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது.

இலங்கை CERT | CC இனால் நடாத்தப்படும் சில எண்ணியல் தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகள் பின்வருமாறு:
  • இலங்கை காவற்துறை அதிகாரிகளுக்காக தேசிய காவல் கலைக்கழகத்துடன்(NPA) இணைந்து நடாத்தப்பட்ட டிப்ளோமா பாடத்திட்டங்கள்.
  • இலங்கையின் வழக்கறிஞர் குழாம் / சங்கத்திற்காக நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டங்கள்.
  • பூட்டான் தேசிய CERT ற்கு நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டம் மற்றும் தொழில்நுட்ப பட்டறைகள்.
  • APCERT மற்றும் APNIC சமூகங்களுக்காக நடாத்தப்பட்ட எண்ணியல்(digital) தடயவியல் பயிற்சி திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள்.